அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை தேவை! - Seithipunal
Seithipunal


ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் வலியுறுத்தல்! 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அரசு நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளில் அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் ஈடுபட்டிருந்தார். மேலும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில், தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19ம் தேதி நடைபெற்றது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பி-பார்ம்மில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துப்போட வேண்டும். ஆனால், அதில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார்.

அதுதான் அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக வைத்த கைரேகையாக இருந்தது. அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தபோது ஜெயலலிதாவை முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ் ஆகியோர் சந்தித்து கைரேகை பெற்றனர். இவர்கள் கைரேகை பெறும் பொழுது அப்போலோ மருத்துவர் பாலாஜியும் உடன் இருந்தார். இதன் காரணமாக ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஷீலா மற்றும் ராமகோன் ராவ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் நடைமுறை வசதிக்காக பல்வேறு தேதிகளில் 21 படிவங்களில் கையெழுதிட்டது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கவில்லை. இந்த குற்றத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையின் போது கண்டறிந்துள்ளது. அதன் அடிப்படையில் அதிகார துஷ்பிரயோகம் செய்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arumugasamy Commission urges to take action against Ram Mohan Rao


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->