அருணா ஜெகதீசன் ஆணையம் அரசை கட்டுப்படுத்தாது.!! தமிழக அரசு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ மேல் விசாரணை செய்து வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தாது எனவும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மை கண்டறியும் அமைப்பு தான் எனவும் வாதிட்டுள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aruna jagatheesan commission not control TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->