மாயமான பள்ளி மாணவிகள் கன்னியாகுமரியில் மீட்பு! பெற்றோர்களுக்கு அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி: ஆசாரிபள்ளம் அருகே மேல பெருவிளையை சேர்ந்த சிறுமி (வயது16), அப்பகுதியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார்.

மற்றொரு சிறுமி (வயது 14) இவர் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக தெரிவித்து வீட்டில் இருந்து சென்றுள்ளனர். 

மாணவிகள் இருவரும் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர்கள் மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். 

அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்று விசாரித்த போது, பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டிற்கு திரும்பி விட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்தனர். 

போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவிகளை செல்போன் டவர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்ட போது, கன்னியாகுமரி பகுதியில் மாணவிகள் இருப்பதாக அடையாளம் காட்டியது. 

உடனே கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் அளித்து மாணவிகளின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் இருவரும் அங்கு சுற்றி திரிந்ததை பார்த்த கன்னியாகுமரி போலீசார் மாணவிகளை மீட்டனர்.

இதனை ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தெரிவித்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் போலீசார் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு சென்று மாணவிகள் இருவரையும் அழைத்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு வந்து போலீசார் மாணவிகளை விசாரித்தனர். 

அப்போது மாணவிகள், ''கன்னியாகுமரியை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சென்றோம்''என தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asaripallam school girls rescue Kanyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->