மனைவி மீது சந்தேகமடைந்த கணவன் - ஆத்திரத்தில் எடுத்த கத்தி... பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே கணவன், மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49). இவர் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். 

இவரது மனைவி சுபிதா (வயது 39). இவர்களுக்கு 2மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜெயராஜ் மனைவி மீதான சந்தேகத்தால் அவ்வப்போது மனைவியை கொலை செய்ய போவதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயராஜ் மது அருந்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து திடீரென அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து விட்டார். 

இதில் சுபிதா ரத்தம் வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது குறித்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுபிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 

புகாரின் பேரில் போலீசார் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜெயராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கணவன், மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asaripallam wife attack husband arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->