ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் சாம்பியன்ஷிப் போட்டி..புதுச்சேரி வீரர்கள் தேர்வு!
Asian Skating Roller Championship Puducherry players selected
சப் ஜூனியர் பிரிவில் ஆசிய ஸ்கேட்டர் ரோலிங் போட்டியில் பங்கேற்பதற்காக புதுச்சேரியில் இருந்து சென்ற ஜெய்ஷிதா கிருஷ்ணகுமார் மற்றும் சாரதி திருமால் ஆகியோர் தேர்வு பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தென்கொரியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இருபதாவது ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக கடந்த வாரம் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி சண்டிகர் நகரத்தில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஸ்கேட்டர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய சார்பாக சப் ஜூனியர் பிரிவில் ஆசிய ஸ்கேட்டர் ரோலிங் போட்டியில் பங்கேற்பதற்காக புதுச்சேரியில் இருந்து சென்ற ஜெய்ஷிதா கிருஷ்ணகுமார் மற்றும் சாரதி திருமால் ஆகியோர் தேர்வு பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேற்கூறிய வீரர்களுக்கு ஸ்கேட்டர் ரோலிங் பயிற்சியாளர் திரு தாமஸ் மற்றும் செயலர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் புதுச்சேரி சார்பில் பங்கேற்கும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செல்வி ஜெயசிதா கிருஷ்ணகுமார் அவர்கள் இதுவரை தேசிய அளவில் பத்து தங்கப்பதக்கம் ஆறு வெள்ளி பதக்கம் மற்றும் நான்கு வெண்கல பதக்கம் வென்றுள்ளார். திரு சாரதி திருமால் அவர்கள் தேசிய அளவில் 11 தங்கப்பதக்கங்களும் ஐந்து வெள்ளி பதக்கங்களும் நான்கு வெண்கல பழக்கங்களும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரர்களுக்கு புதுச்சேரி அரசு ஊக்கத்தொகை அளித்து ஆதரவு தர வேண்டுமென ஸ்கேட்டர் வீரர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
Asian Skating Roller Championship Puducherry players selected