சென்னையில் பரபரப்பு... சேவல் சண்டையை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல்...!!
Assault on police SI who stopped cockfight in Chennai
சென்னை அடுத்த அயனாவரம் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அயனாவரம் கே2 காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது இறந்தவரின் உறவினர்கள் சாலையை மறித்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.
இதனை காவலர் திருநாவுக்கரசு என்பவர் வீடியோ எடுத்த பொழுது சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் காவலரை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க முயன்ற பெண் உதவி ஆய்வாளர் மீனா என்பவரும் தாக்குதலுக்கு ஆளானார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் குணசேகரன், சஞ்சயன் என்ற இரு நபர்களை கைது செய்தனர். அயனாவரத்தில் பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Assault on police SI who stopped cockfight in Chennai