தமிழக பட்ஜெட் - தேதியை அறிவித்தார் சபாநாயகர்.!
assembly speaker appavu announce tn budget submit date
மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், தமிழகத்தின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற பேரவைத்தலைவர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழக சட்டசபையில் மார்ச் 14-ந்தேதி 2025-2026ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
மார்ச் 15-ந்தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றுத் தெரிவித்தார். இதற்கிடையே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பட்ஜெட் தாக்கலுக்கான கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
assembly speaker appavu announce tn budget submit date