கொளுத்தும் கோடை வெயில் - எலுமிச்சை பழத்தின் விலை அதிரடி உயர்வு.!
lemon price increase
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கூடூா், ராஜம்பேட்டை, கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் சுமாா் 100 டன் அளவுக்கு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் எலுமிச்சை பழத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது. நேற்றைய நிலவரப்படி 5 லாரிகளில் 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்துள்ளது.
அதாவது, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.