சிலுமிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி!!! சாலையோரம் சென்ற பெண்ணின் கன்னத்தை கிள்ளியதால்....?
young man who committed crime was given slap pinching cheek woman walking along road
சென்னை மாநகரம் தி.நகர் சாலையில் தர்ம அடி வாங்கிய நபர். சாலையில் வேலைக்காக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடி கொடுத்துள்ளனர்.

ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியிலிருந்து அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்நேரம், தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி 'ஐ லவ் யூ செல்லம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார்.சத்தம் கேட்டு அருகிலிருந்து பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து கூட்டமாக தர்ம அடி கொடுத்தனர்.
பிறகு தேனாம்பேட்டை காவலுக்கு தகவல் அளித்தனர். இச்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பாக இருந்தது.
English Summary
young man who committed crime was given slap pinching cheek woman walking along road