லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை...!!! 22 மாவட்டங்களுக்கு மழை... இரவு 7:00 மணி வரை....!
Light to moderate thunderstorms Rain 22 districts till 7 pm
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில், நீலகிரி,சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, விருதுநகர், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், தேனி, குமரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளது.
English Summary
Light to moderate thunderstorms Rain 22 districts till 7 pm