சத்துணவு மையத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஊழியர்களை நியமனம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விண்ணப்பிக்கும் பெண்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கலாம். 

இதற்கான விண்ணப்பங்களை https://chennaicorporation.gov.in என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை, சத்துணவு பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வின் போது தாங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வர வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in school cooking assistent


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->