அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: இ.பி .எஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி! - Seithipunal
Seithipunal


அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு கூறியிருந்தார்.இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-1957- பவானி ஆற்றின் உபரி நீரை திருப்பி விடவேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள் அப்போதைய முதலமைச்சர்  காமராஜர் அவர்களிடம் மனு அளித்தனர் என்றும் அதனை தொடர்ந்து  1972-இத்திட்டத்திற்கு அத்த்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயரிடப்பட்டு திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது முதல்வராக இருந்தபோது கலைஞர் காலத்தில் என்று கூறியுள்ளார்.


மேலும்  2009-Technical expert committee அமைக்கப்பட்டு திட்ட வரையறை செய்யப்பட்டது. அப்போதைய முதல்வர் -கலைஞர் காலத்தில் என்றும்  2019-திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,634 கோடி செலவில் 34 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் போதிய நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப் படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 2021-2024.இத்திட்டத்திற்கு முழுமையாக தேவையான 1,960 கோடி நிதியையும் ஒதுக்கி, அத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளை களைந்து, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.தற்போதைய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆட்சியில் என  அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.மேலும் 2025-நீர் மக்களுக்கு கிடைக்கப் பெற்றது முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆட்சியில் என  
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Athikadavu-Avinashi project: Minister Senthil Balaji responds to EPSs allegation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->