வாட்ஸ்- ஆப் மூலம் திருமணம் செய்துகொண்ட பள்ளி மாணவன் மற்றும் மாணவி; பெற்றோர்கள் அதிர்ச்சி..!
A schoolboy and a girl got married over WhatsApp
பீகாரில் வாட்ஸ்-அப் செயலி மூலம் பள்ளி மாணவரும், மாணவியும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், போலீசாரும், பெற்றோரும் திணறி வருகின்றனர்.
முசாபர்பூரில் வசிக்கும் பிளஸ் 2 மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் அறிமுகமாகி வாட்ஸ்-அப்பில் மெசேஜ்களை பரிமாறி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் நேசித்ததாக தெரிகிறது. இருவரும் மைனர் என்பதால் அவர்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/marr-sbx4w.jpg)
இந் நிலையில், வாட்ஸ்-அப் மெசேஜில் மாணவன் ஒன்றை மாணவிக்கு அனுப்பியுள்ளான். அதில் Kabool hai (தமிழில் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம்) என 03 முறை டைப் செய்து அனுப்பி இருக்கிறார். பதிலுக்கு எதிர்முனையில் இருந்து மாணவியும் அதே பதிலை அனுப்ப, அவரை மாணவனோ மனைவியாக ஏற்றுக் கொண்டு உள்ளார்.
இந்த டிஜிட்டல் திருமணம் பற்றிய விவரம் அறிந்த பெற்றோர், இந்த kabool hai திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் மாணவனோ அந்த மாணவி தான் தனது மனைவி என்று பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/marr 1-7vf4r.jpg)
அத்துடன், அந்த மாணவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவேன் என்று பெற்றோரிடம் அடம் பிடிப்பதாக கூறப்படுகிறது. அதேப்போல மாணவியும், மாணவன் சொல்வதைக்கேட்டு நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் திருமண விவகாரத்தில் தீர்வுகாண இருவரின் பெற்றோரும் போலீசின் உதவியை நாடினர். குறித்த மாணவ ஜோடியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்த போலீசார், ஆலோசனை கூறி புரிய வைக்க முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. மாணவன் தான் என் கணவன் என்று மாணவியும் பிடிவாதமாக இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் முழித்து வருவதாக கூறப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/marr 3-7vf4r.jpg)
மேலும், இருதரப்பு பெற்றோரையும் அழைத்த போலீசார், உரிய புகார் தந்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அத்துடன், மொபைல் போன் மூலம் விவாகரத்து செய்து கொண்டதாக இதற்கு முன் பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்போது தான் முதல் முறையாக, மொபைல் போனில் திருமணம் செய்து கொண்டதாக, செய்தி வெளியாகி இருப்பதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
A schoolboy and a girl got married over WhatsApp