துணை முதலமைச்சரிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்ற சந்திரகுமார் எம்.எல்.ஏ..! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றுள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம். பெரியார் மண்ணில் கழகம் பெற்ற பெரு வெற்றியை குறிக்கும் வகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவச்சிலையை அண்ணன் சந்திரகுமார் அவர்கள் நமக்கு பரிசளித்தார்கள். அவரது பணிகள் சிறக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrakumar MLA visited the Deputy Chief Minister in person and received congratulations


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->