100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி தந்த ஏ.டி.எம் - புதுக்கோட்டையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கீரனூர் கிள்ளுக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில், நேற்று மாலை பணம் எடுத்தவர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டாக வந்தது. இதனால் பணம் எடுத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

இதற்கிடையே ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து அதிக தொகை வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. அந்தத் தகவலின் படி ஏ.டி.எம். எந்திர ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை பரிசோதனை செய்தனர்.

அந்த சோதனையில், ரூ.100 நோட்டுகள் வைக்கும் இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டு வந்துள்ளது. இதுவரைக்கும் இந்த ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.2½ லட்சம் வரை பணம் பட்டுவாடா ஆகியுள்ளது.

அதே சமயம் ஏ.டி.எம்.மில் இருந்து கூடுதலாக பணம் எடுத்தவர்கள் சிலர் பணத்தை திருப்பி கொடுத்ததில் ரூ.60 ஆயிரம் வந்துள்ளது. மற்றவர்களின் வங்கி கணக்கை ஆராய்ந்து பணத்தை திரும்ப பெற வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கீரனூரில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் வந்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

atm give 500 rupees note instead 100 rs note


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->