காஞ்சிபுரம்: கடப்பாறையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் ராஜம்பேட்டை, காஞ்சிபுரம்-வாலாஜா சாலையில் அமைந்துள்ள இந்த் ஏடிஎம் மையத்திற்குள் இன்று அதிகாலை 4 மணி அளவில் புகுந்த திருடர்கள், ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது அவ்வழியாக போலீசார் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டு ரோந்து வந்துள்ளனர்.

இதையறிந்த திருடர்கள், திருட்டு முயற்சியை கைவிட்டு ஏடிஎம் மையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து போலீசார் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டறிந்தனர். மேலும் ஏடிஎம் உள்ளே சென்று பார்த்தபோது இயந்திரத்தை உடைக்க எடுத்து வந்த கடப்பாரை மற்றும் இரும்பு கம்பிகள் அதன் அருகில் கிடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போலீசார் இது குறித்து மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempted robbery by breaking the ATM machine in kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->