ஆரோரியஸ் 2025 ..கல்லூரிகளுக்கு இடையிலான மருத்துவ மாநாடு..ஏராளமான மாணவ,மாணவிகள் பங்கேற்பு!
Aurorious 2025 InterCollegiate Medical Conference A large number of students participate
காட்டாங்குளத்தூர்,எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அகத்தியர் குழுவால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஆரோரியஸ் 2025 என்ற மருத்துவக் கல்வி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.
பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இந்த மாநாடு, மூன்று நாட்கள் நிகழ்வாக நடைபெற்றது. கல்விசார் அறிவு பரிமாற்றம், செய்முறை பயிற்சி மற்றும் படைப்பாக்க திறன் வெளிப்பாடு ஆகியவை பங்கேற்பாளர்களின் சிறப்பான ஈடுபாட்டுடன் இம்மாநாட்டில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆரோரியஸ் 2025 நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்னாற்றல் கழகத்தின் (TANGENCO) தலைவர் டாக்டர் ജെ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வலுவான ஊக்கமளிக்கும் சிறப்புரையை நிகழ்த்தினார்.
“ஆரோரியஸ் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அதிக எண்ணிக்கையில் இத்தனை இளமையான மற்றும் ஆர்வமிக்க மருத்துவ மாணவர்களைப் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உலகளாவிய சுகாதாரம் விரைவான மாற்றங்களுடன் புதிதாக உருவாகும் மாறுபாடுகளால் சோதனைக்கு உட்படுத்தப்படும் இந்த காலகட்டத்தில், மருத்துவத் துறையில் அடுத்த தலைமுறையினர் துடிப்போடும், ஆர்வத்தோடும் முன்வருவது மனதிற்கு திருப்தியளிக்கிறது.
நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி இதுதான்: கற்றலுக்கு மட்டுமல்ல, ஆராய்ச்சிக்கும், சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களுடன் உங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் முழு ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படுங்கள். நிகழ்நேர சுகாதார நெருக்கடி நிலைகளைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடுங்கள். இந்த உணர்வுதான், விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க நடவடிக்கைகள் மீதான இந்த அர்ப்பணிப்புதான் - தொற்றுநோய்கள் மற்றும் சமீபத்திய கோவிட்-19 போன்ற பெருந்தொற்றுகள் உட்பட பெரிய சுகாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளிக்க ஒரு நாடாக நமக்கு உதவியுள்ளது. அந்த பெருந்தொற்று சூழலை பல நாடுகளை விட நாம் சிறப்பாக நிர்வகித்தோம். என்று டாக்டர் ജെ. ராதாகிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார்...
English Summary
Aurorious 2025 InterCollegiate Medical Conference A large number of students participate