மகளின் சிகிச்சைக்காக முதலமைச்சரிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்த தாய்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் சவுபாக்கியா.  இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் டானியா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோய் தொடர்பாக சிறுமிக்கு  சிகிச்சை அளித்தும்  சரியாகவில்லை. இந்நிலையில் முகம் அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர். 

இதுகுறித்து சிறுமியின் தாய் தெரிவிக்கையில் , மகளுக்கு 3 வயது இருக்கும் போது கண்ணத்தில் சிறு புள்ளி காணப்பட்டது. அது ரத்த கட்டு என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். 

ஆனால் இன்று வரை குணமாகவில்லை. மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்காக  பணம் அதிகமாக கேட்கின்றனர். 

அந்த அளவிற்கு எங்களிடம் பணம் இல்லாததால் எனது மகளின் சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avadi affected by Unknown Woonds infection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->