வேலை நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது..!! ஆவடி மாநகர் காவல் ஆணையர் அட்வைஸ்..!!
Avadi Commissioner Adviced Guards not use cell phones in working hours
சென்னை பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட புற காவல் நிலையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். அதே போன்று சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல், திருமுல்லை வாயில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அய்யப்பாக்கம் பகுதியிலும் புறக்காவல் நிலையங்களை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
இந்த புறக்காவல் நிலையங்கள் மூலம் பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு மனு ரசீது வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். 24 மணி நேரமும் இந்த புறக்காவல் நிலையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பான்சத்திரம் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய ஆவடி மாநகர் காவல் ஆணையர் "வேலை நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக் கூடாது. வேலை நேரம் முடிந்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். அதேபோல சமூக வலைத்தளங்களிலும் தேவையின்றி கருத்துக்களை பதிவிட கூடாது.
அரசு தான் சம்பளம் கொடுக்கிறது. எனவே அரசு வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். ஆவடி மாநகர காவல் ஆணையர் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மதுவிலக்கு என 3 துறைகளையும் இணைத்து புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார்.
English Summary
Avadi Commissioner Adviced Guards not use cell phones in working hours