அதிரவைக்க போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - இந்த மாடுகளுக்கு அனுமதி இல்லை.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் படி, மதுரை மாவட்ட நிர்வாகம் இந்த போட்டிகளுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதாவது, ஜல்லிக்கட்டு காளைகளை அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை தகுதிச்சான்று வழங்க விண்ணப்பம் வழங்கும்போது, மாடு திமில் தெரியும் வகையில், மாட்டின் உரிமையாளரின் புகைப்படத்துடன் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதி இல்லை. இதற்கிடையே, இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான உடல்தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணிக்காக மருத்துவப் பரிசோதனை இன்று ஆரம்பமாகியுள்ளது. 

இந்த பரிசோதனையில் காளைகளின் கொம்பு உயரம், திமில் அளவு, நான்கு பற்கள் உள்ளதா?, காளைகள் 3 முதல் 8 வயதிற்கு உட்பட்டு உள்ளதா என்பது போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் பின்பே சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஜன.15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avaniyapuram jallikattu rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->