அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | திமிரும் காளைகள்... தேனி வீரர் முதலிடம்! - Seithipunal
Seithipunal


மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 7 காளைகளை அடக்கி தேனீ வீரர் முதல் இடத்தில் உள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் இன்றும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளை கடைபிடிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். 

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி முதல் சுற்று முடிந்து  இதுவரை 7 காளைகளை அடக்கி தேனி சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் முதலிடத்தில் உள்ளார். அயனியாபுரத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avaniyapuram Jallikattu Theni player first


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->