தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை - அரசு அறிவிப்பு.!
Avin products sale in ration shop in tamilnadu
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் நேற்று செய்தியாக சந்தித்து பேசிய அவர், ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் ஆவலுடன் சேர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் புதிய ஆவின் மையங்கள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Avin products sale in ration shop in tamilnadu