"நட்சத்திர காவலர் விருது" காவல் ஆணையரின் அறிவிப்பால் குஷியான காவல்துறை...!
Award for Outstanding Guard
சிறப்பாக பணியாற்றும் காவல்ரகளை தேர்ந்தெடுத்து நட்சத்திர காவலர் விருது வழங்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்பாக பணிபுரியும் காவல்ரகளை பாராட்டி வெகுமதி வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஒரு மாதத்தில் மெச்சதகுந்த வகையில் பணியாற்றும் காவல்ர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நட்சத்திர காவலர் என்ற விருதையும் 5 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி தலைமையிட கூடுதல் ஆணையர் தலைமையிலான குழு, சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரியும் காவலர்களை கண்டறிந்து பணி மதிப்பீடு செய்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த தகவல் அனைத்து காவலர்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவு அவர் கூறியுள்ளார்.
English Summary
Award for Outstanding Guard