நாமக்கலில் செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவில் மணிகள்.!
ayoddhy temple bells manufactured in namakkal
ராமஜென்ம பூமி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்ட செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில், மூன்று அடுக்கில் உருவாகி வருகிறது.
இந்த கோவிலின் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்தக் கோவிலுக்காக ஆலய மணிகள் செய்து தருமாறு தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆர்டர் கொடுத்துள்ளார்.
அந்த ஆர்டரின் பேரில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என்று பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர்.
இந்த மணிகளை தயார் செய்த தொழிலாளர்கள், "ராமர் கோவிலுக்கு தங்கள் மணி செய்து தருவது, தங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
English Summary
ayoddhy temple bells manufactured in namakkal