அயோத்தி ராமர் கோவில் திறப்பு - மரியாதையுடன் காங்கிரஸ் நிராகரிப்பு! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே மற்றும் சோனியா காந்தி பங்கேற்க போவதில்லை என்று, அக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் நடத்தப்படும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை கடந்த மாதம் எண்கள் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.

மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். ராமரை லட்சக்கணக்கான மக்கள் வழிபாடுகிறார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி, தேர்தல் ஆதாயத்துக்காக அவசர அவசரமாக கோயிலை திறந்து வைக்கும் முடிவை எடுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhi Ramar Temple Congress head announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->