தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் - ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஐயா வைகுண்டர் ஜெயந்தி நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி சனாதன தர்மத்தை ஆதரித்தவர் அய்யா வைகுண்டர் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

ஆளுநரின் இத்தகைய பேச்சுக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி அடிகளார் பாலபிரதிபதி மறுப்பு தெரிவித்ததோடு ஆளுநருக்கு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி சாமி தோப்பில் ஐயா வைகுண்டர் தலைமை பதி செய்தியாளர்களை சந்தித்தபோது "ஆனால் வரலாறு தெரியாமல் பேசவில்லை, வரலாற்றைத் தெரிவித்து பேசுகிறார். சனாதன தர்மத்தை ஆதரித்தவர் ஐயா வைகுண்டர் என்று ஆளுநர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண்-பெண் பேதம், சாதியில்லை என பல கோட்பாடுகளை உருவாக்கியவர் ஐயா வைகுண்டர். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மக்களாக அய்யா வழி மக்கள் இருக்கின்றார்கள். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்" என காட்டுமாக பதிலடி கொடுத்துள்ளார் ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayya vaikundar Bala prajapathi condemned governor Ravi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->