ஐயப்ப பக்தர்களே இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி!...சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை இயக்கம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜைக்காக இந்த மாதம் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில்,  டிசம்பர் 26-ம் தேதி வரை திறந்திருக்கும்.

பின்னர், கோவில் நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு ஜோதி விழாவிறகாக  டிசம்பர் 30-ம் தேதி முதல் 2025 ஜனவரி 19-ம்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.  இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இதற்கிடையே, அண்மையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடியுடன் செல்ல இந்திய விமான நிலைய ஆணையகம் அனுமதி அளித்துள்ள நிலையில், பக்தர்கள் தற்போது விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் இருந்து கொச்சிக்கு கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து, இரவு 9:25 மணி வரையில், 8 புறப்பாடு விமானங்களும், கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியில் இருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayyappa devotees here is a good news for you additional flight operation from chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->