மதுரை || பிறந்த மூன்று நாளிலே உயிரிழந்த பெண் சிசு - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மதுரை || பிறந்த மூன்று நாளிலே உயிரிழந்த பெண் சிசு - தீவிர விசாரணையில் போலீசார்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே கல்லாணை காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர்கள் இளங்கோவன் - நாகஜோதி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக நாகஜோதி கர்ப்பமாகியதால் பிரசவத்திற்காக அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட்டார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அதன் படி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 

அந்தக் குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் குழந்தை சிசு நலப்பராமரிப்பு பிரிவிலும், நாகஜோதி வார்டிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை பிறந்த மூன்றாவது நாள் நாகஜோதி குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்து விட்டு வார்டுக்கு வந்து விட்டார். 

அதன் பின்னர் திடீரென குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு நாகஜோதி குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் குழந்தையின் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இளங்கோவன் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிறந்து மூன்று நாட்களே ஆனா குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby died after borning three days in madurai govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->