செங்கல்பட்டு.! மழலையர் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மழலையர் பள்ளி கூடத்தில் தண்ணீரில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தர்கா சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுடைய 9 மாத பெண் குழந்தையான கவிஸ்ரீ இத்திகாவை வீட்டின் அருகே உள்ள மழலையர் பள்ளிக்கூடத்திற்கு நேற்று காலை ஜெயஸ்ரீ அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் மதியம் பள்ளிக்கூடத்தின் இரண்டாவது அறையில் உள்ள கழிவறைக்கு சென்ற குழந்தை அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளது.

இதில் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குழந்தை கவிஸ்ரீ இத்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பல்லாவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அனைவரிடத்திலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby girl dies after falling into bucket of water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->