மகிழ்ச்சியான செய்தி மக்களே! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! - Seithipunal
Seithipunal


சென்னை : பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாளை ஒட்டி சென்னையில் இருந்து 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஜூன் 15 மற்றும் ஜூன் 16 வார விடுமுறை நாட்கள் மற்றும் ஜூன் 17 முஸ்லிம் பண்டிகையான பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் சென்னையில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு மக்கள் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும்  பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி,கும்பகோணம் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூன் 14,15,16 தேதிகளில் 1270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 14 மற்றும் ஜூன் 15 தேதிகளில் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக ஜூன் 17ஆம் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அன்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakrid festival 1300 special buses run


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->