மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்.. ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த மீன்களின் விலை.! - Seithipunal
Seithipunal


மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் இந்தாண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் தமிழம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும். அதன் காரணமாக மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பி படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும், இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தடையை மீறி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 6  ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டு படகுகளை வைத்து பிடிக்கும் மீன்களின் தேவை அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அந்த வகையில் நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் பாரை கிலோ 300 ரூபாய்க்கும், விளை மீன் கிலோ 400 ரூபாய்க்கும், சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban fish time period Fish price increases in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->