குமரி பகுதியில் இன்று முதல் மீன்பிடிக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை இறுதி வரை 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. 

இந்த காலத்தில்  விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலகட்டம் என்பதால், மீன்வளத்தைப் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்க உள்ளது. ஆகவே, விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிப்பதை தடைசெய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, குமரி மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்கபட்டணம், கொல்லங்கோடு, நீரோடி உள்ளிட்ட கடற்கரை கிராமத்தில் இன்று முதல் ஜூலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக் காலம் அமலில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban fishing in kanniyakumari


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->