ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்.! - Seithipunal
Seithipunal


மீன்கள் இனப்பெருக்கத்திற்காக வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைக்கு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த 60 நாட்களில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க இந்த தடைக்காலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கும் பணிக்கு செல்லாமல் தங்களது உபகரணங்களை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். 

மீன்பிடி வலையை சரிசெய்தல், படகுகள் மற்றும் உபகரணங்களை பழுது நீக்குதல் உள்ளிட்ச பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள். 

மீன்பிடி தடை காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தி இருக்காது என்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இதனால் இந்த காலங்களில் மீன்களின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்கும்.

இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வருமானம் இழப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban on trawling operations fisher


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->