ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் சரத்குமார்.! - Seithipunal
Seithipunal


ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் சரத்குமார்.!

மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு முடக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் 90 லட்சம் ரூபாய் தொகையை இழந்த மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது ம் மிகவும் வேதனையளிக்கிறது.  

தமிழகத்தில் சூதாட்டத்திற்கு தடை என்று சொல்லும் போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சவுதி அரேபியா, சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் பல இணையதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தடையை மீறி செயல்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் விதியும் நடைமுறையில் உள்ளது. 

காலத்திற்கேற்ப தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்தாலும், உலகத்தை இணைத்திருக்கும்  இணையதளத்தை, இந்தியாவிலும் தீவிரமாக கண்காணித்து,  தடைசெய்வது மிகுந்த அவசியம்.  இது மாநிலங்களுக்குள் மட்டும் செயலிகளுக்கு தடை என்றிருந்து, நாடு முழுவதும் செயலிகளுக்கு அனுமதி என்றிருந்தால் பயன் கிடையாது. 

ஆகவே, அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கும்,  ஆபாச இணையதள செயலிகளுக்கும் நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்து முழுமையான தீர்வு காண வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban pornographic websites in india sarathkumar request to centralgovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->