சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  - காரணம் என்ன?

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியில் குளிப்பதற்காக தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

இதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டு எருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் சுருளி அருவிக்கு செல்லும் மனச்சடை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன.

இதனால் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், யானைகள் தற்போது முகாமிட்டுள்ள பகுதியில் இருந்து சென்ற பின்னரே அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban tourist dont bath in suruli falls forest department announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->