#BigBreaking || அந்த கடைகளை மூடி சீல் வைங்க - சற்றுமுன் அதிரடி உத்தரவை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்.!
banned plastic issue chennai hc order march
நீலகிரி கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களை சீல் வைக்க, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சார்பில், "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அவர்கள், வெறும் அபராதம் விதிப்பது மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்து உள்ள வணிக நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நீலகிரியில் பழுதான அனைத்து தானியங்கி குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையங்களையும், வரும் 9ம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
banned plastic issue chennai hc order march