தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக பறிமுதல்! 45 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்.! - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்களில் 431 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு 45,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக “மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களால் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, நேற்று மற்றும் இன்று, இரண்டு நாட்களில் மட்டும் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.11,000/- அபராதம் விதிக்கப்பட்டு, 96 கிலோ வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள், 
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.29,500/- அபராதம் விதிக்கப்பட்டு, 289.5 கிலோ வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் நேற்று 93 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.3,600/- அபராதம் விதிக்கப்பட்டு, 34 கிலோ வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் இன்று வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 

தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.1,500/- அபராதம் விதிக்கப்பட்டு, 12 கிலோ கிராம் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் என மொத்தம் 431.50 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.45,600/- அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banned Plastic penalty imposed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->