விருதுநகரில் பெரும் சோகம்!...ரயில் முன் பாய்ந்து 2 பெண்கள் தற்கொலை! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில் நிலையத்தை கடந்த போது, பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த ரயில்வே போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் சாத்தூர் குருலிங்கபுரத்தை சேர்ந்த சுந்தரி என்பது தெரியவந்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கருப்பசாமி - பேச்சியம்மாள் என்ற தம்பதியின் மகன் உயிரிழந்த நிலையில், தாய் பேச்சியம்மாள் மனவேதனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஆலமரத்துப்பட்டி ரயில்வே கேட் அருகே மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் சென்றுள்ளது. அப்போது ரயில் முன்பு பாய்ந்து பேச்சியம்மாள் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Big tragedy in virudhunagar two women committed suicide by jumping in front of the train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->