பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ரத்து?....ஈவிபியில் பயங்கர விபத்து! - Seithipunal
Seithipunal


தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் இதிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து  நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்க உள்ளார்.

வரும் அக்டோபர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில், அவரின் கை, இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடக்குமா என்று சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss 8 Canceled Terrible accident in evp


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->