தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய வழக்கு - பீஹார் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவைத்து போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வெளி மாநிலத்தவரிடையே தமிழகத்தின் மீதான அபிப்பிராயம் குறைந்துள்ளது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சமூக வலைதளங்களை கண்காணித்து, போலி செய்திகளை பரப்பியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். இதில், பிரசாந்த் குமார் என்பவரது முகநூல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி பகிரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் தனிப்படை போலீசார் பிரசாந்த்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் பிஹார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரசாந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு நீதிமன்ற உத்தரவின் படி, போலீசார் அவரை விசாரணைக்காக நேற்று திருப்பூர் அழைத்து வந்தனர். மேலும், அவரை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar youth arrested for rumores north states employees attack in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->