தர்மபுரி மாவட்டம்.! இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கோவிந்தராஜ்(24). இவர் லோடு ஆட்டோ டிரைவர் ஆவார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு கோவிந்தராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்பொழுது பட்டகப்பட்டி அருகே, எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜ் மீது அந்த வழியாக வந்த பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike bus accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->