#சென்னை || போலீஸ் அதிகாரி மகன் உட்பட மேலும் 5 பேர் கைது.! இன்ஸ்டா பதிவு வைரல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19ம் தேதி நடந்த பைக் சாகசம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் 5 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை பாலாஜி, தண்டையார் பேட்டை மோவின், ஹரிஷ் குமார், திருவொற்றியூர் சல்மான் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தண்டையார்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் மகன் டிவின்குமாரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, பைக் வீலிங் செய்வதில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

சென்னையில் போலீஸ் அதிரடி காட்டி வருவதால், பைக் வீலிங் செய்வதில் இருந்து சிறிதுகாலம் விலகி இருக்க இளைஞர்கள் முடிவு செய்து உள்ளதாக அந்த பதிவில் தெறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை இன்ஸ்டாகிராமில் யார் பதிவு செய்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bike race chennai police arrest march


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->