பைக் டாக்ஸி விவகாரத்தில் திடீர் திருப்பம்! அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


போக்குவரத்துத் துறையில் இருசக்கர வாகனங்களை வணிக நோக்கில் பயன்படுத்தும் விவகாரத்தில், அதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். அதில்,

மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்ஸிகளை வாடகை ரீதியாக பயன்படுத்த அனுமதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன.  

பைக் டாக்ஸிகள் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதால், இது பலரின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.  

அதே நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக சில கருத்துக்கள் நிலவுவதால், இதற்கான தீர்வுகள் ஆராயப்பட்டு வருகின்றன.  

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுடன் இணைந்து இணங்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BikeTaxi Sivasankar transport Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->