#வேலூர் || பிரியாணி ஆஃபரால் குவிந்த மக்கள்.. முதல் நாளே கடையை மூடிய ஆட்சியர்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சித்தூர் பேருந்து நிலையம் அருகே தம்பி பிரியாணி என்ற பெயரில் புதிதாக பிரியாணி கடை துவங்கப்பட்டதை அடுத்து முதல் நாளானது இன்று ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மற்றொரு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் காலை முதல் கடும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி கடை வாங்கிச் சென்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது புதியதாக தொடங்கப்பட்ட பிரியாணி கடை வேலூர் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் துவங்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கடைக்குள் இருந்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி போலீசார் கடையை பூட்ட உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி புதிதாக திறக்கப்பட்ட  பிரியாணி கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biryani shop was closed on first day due to heavy crowd in Vellore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->