மிரட்டல், கைது, ஜாமின்! பாஜகவின் முக்கிய புள்ளியின் பதவியை பறித்த அண்ணாமலை!
BJP Agoram Annamalai Dismissal Darumapuram Adheenam case issue
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாவட்ட நிர்வாகிகள் மூன்று பேர் அதிரடியாக கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்கண்ட மாவட்ட நிர்வாகிகள். அவர்கள் வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதன்படி, திருவாரூர் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய மூவரும், அவர்கள் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பதவிப்பறிப்பின் பின்னணி:
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன சைவ மடத்தின் தலைமை மடாதிபதியான மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி, அவரின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றதாக பாஜகவின் மாவட்டம் தலைவர் அகோரம் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், இது குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், பாஜக நிர்வாகி அகரம் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த ஒன்பது பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தையும் மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தற்போது மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்துள்ள நிலையில், அவரை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
English Summary
BJP Agoram Annamalai Dismissal Darumapuram Adheenam case issue