செம்ம டிவிஸ்ட்! சாதித்துக் காட்டிய அண்ணாமலை! இனி தான் ஆட்டமே! - Seithipunal
Seithipunal


தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து வருவதாக தனது X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்து வந்தார்.

மேலும், பாஜகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் சிலரும், பாஜகவில் இருந்துகொண்டே அண்ணாமலையை எதிர்த்து அரசியல் செய்துவரும் சிலரும் இதுதான் சமயம் என்று அண்ணாமலை மீது கடுமையான விமர்சனக்கலை வைத்து வந்தனர்.

மேலும், டெல்லி சென்ற அண்ணாமலைக்கு பாஜக தலைமை கடுமையாக கண்டித்ததாகவும், இதனால் அண்ணாமலை பெரும் மனா உளைச்சலில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின. எப்படி இந்த சர்ச்சைகளுக்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைப்பார் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜனை அழைத்து ஒரு விரலை நீட்டி கண்டிப்பதுபோல் எதையோ சொல்லும் காணொளி வைரலானது.

"நீங்கள் பேசியது தவறு, அது போல் இனி பேச வேண்டாம். மாநில தலைவருக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். வார்த்தைகளை கவனமாக பேசுங்கள்" என்று அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜனை அமித்ஷா கண்டித்து இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்திற்கு சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தது நடந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

மேலும், இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி தமிழிசை  சௌந்தரராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. 

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி 
தமிழிசை  சௌந்தரராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் தன்னை சுற்றிவந்த விமர்சங்களுக்கும், வரும் 2026 தேர்தல்வரை நான் தான் தலைவர் என்பதையும் வெளிக்காட்டியுள்ள அண்ணாமலை தமிழக அரசியலில் புது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai meet Tamilisai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->