கோவை தற்கொலை குண்டுவெடிப்பு! தீவிரவாதிகளே ஒத்துக்கிட்டாங்க, திமுகவினர் தூக்கத்திலிருந்து எழுங்கள் - அண்ணாமலை அறிவுரை! - Seithipunal
Seithipunal



கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 23ஆம் தேதி கோவை இந்து கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவன் உடல் கருகி உயிரிழந்தார்.

மேலும் அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கு உண்டான அனைத்து ஆதாரங்களும் அவன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. 

இந்த சம்பவம் நடந்தது முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தற்கொலை படை குண்டு வெடிப்பு என்று கூறி வந்தார். ஆனால், திமுகவினர் இதனை சாதாரண கார் சிலிண்டர் வெடிப்பு, கார் வெடிப்பு என்று கூறினர். 

இந்த நிலையில் நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம், மங்களூர் பகுதியில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்து இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தென்மாநிலங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு ஆகிய இரு சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. அவர்களின் அந்த அறிக்கையில், எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். பாஜக மற்றும் இந்திய ராணுவம் இதன் எங்களுக்கு விரோதம் உள்ளது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்ணாமலை விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "கோயம்புத்தூர் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

திமுக கட்சி உறுப்பினர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது தூக்கத்திலிருந்து எழுந்து, தங்கள் "சிலிண்டர் ப்ளாஸ்ட்" கோட்பாட்டை விட்டுவிடுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai say about Mangaluru Blast Coimbatore Car Blast 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->