பாஜக எம்பியாக நடிகர் சுரேஷ் கோபி வெற்றி, பின்னடைவை சந்தித்த தமிழிசை சௌந்தர் ராஜன்
bjp candidate suresh gopi in trissur got victory
ஆளும் பாஜக அதன் கோட்டையானா அயோத்தியில் ராமர் கோயில் உள்ள சைஸாபாத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், கேரளா திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறார்.
மேலும், ஸ்டார் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர் ராஜன் தென் சென்னை தொகுதியில் 27,029 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்தார். இதை தொடர்ந்து, ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்கு 61,226 பெற்றுள்ளார் மற்றும் அவரை போலவே பெயர் கொண்ட பன்னீர் செல்வங்களின் வாக்குகளின் எணிக்கை, ஒச்சப்பன் பன்னீர் செல்வம் - 680, மயிலாண்டி பன்னீர் செல்வம் - 521, ஒய்யாரம் பன்னீர் செல்வம் - 269, ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம் - 127 வாக்குகள் பெற்று உள்ளனர். மேலும் நோட்டாவிற்கு 1514 வாக்குகள் உள்ளன.
கோவை தொகுதியில் திமுக எதிராக போட்டியிட்ட அண்ணாமலை பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளார். கோவையில் திமுகவை டெபாசிட் கூட வாங்க விடாமல் தோற்கடிப்பேன் என்று கூறிய அண்ணாமலை கிட்ட தட்ட 20,165 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து உள்ளார்.
English Summary
bjp candidate suresh gopi in trissur got victory