தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணம் ஜெயலலிதா..தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை PTI க்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் தமிழகத்தின் பாஜகவின் எழுச்சி குறித்து கூறிய கருத்துக்கள் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகச் சிறந்த இந்துத்துவ கொள்கையுடைய தலைவர். இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவும், இந்து மத மக்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தவர் ஜெயலலிதா. எனவே தான் அவருக்கு இந்துக்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.

பல்வேறு தரப்பிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு வந்தபோதும், கோவில் கட்டுவதை வெளிப்படையாக ஆதரித்து வந்தவர் ஜெயலலிதா. மேலும் கோவில்களுக்கு தனது சம்பளத்தை நன்கொடையாக அளிப்பது, யானைகளை தானமாக அளிப்பது போன்ற செயல்களோடு கோவில் புனரமைப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இதிலிருந்தே ஜெயலலிதாவின் இந்துமதப் பற்றினைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அவரது கொள்கைகளை கைவிட்டு விட்டதால், பாஜக அந்த வெற்றிடத்தை நிரப்பி விட்டது. ஆகவே தான் தமிழக மக்கள் இந்துத்துவ கொள்கையுடைய பாஜகவை ஆதரிக்கின்றனர்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp growth Tamilnadu due jayalalitha by annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->