திமுகவின் ஜால்ரா! ஸ்டாலின் பேச்சை கவுன்சிலர் கூட கேட்க மாட்டார் - போட்டு தாக்கிய எச். ராஜா! - Seithipunal
Seithipunal


முக ஸ்டாலின் பேச்சை அவரின் கட்சி கவுன்சிலர் கூட கேட்க மாட்டார் என்று, பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார். 

இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட எச் ராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து உள்ளதை இந்த மேயர் தேர்தல் அம்பலப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் சொல்வதை திமுக கவுன்சிலர்கள் கூட கேட்பதில்லை. அவர் சொன்ன மேயர் வேட்பாளருக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் பாஜக மட்டுமே ஆதரவான நிலையில் உள்ளது. வங்கதேசத்தில் 20 சதவீதத்தில் இருந்த இந்து மக்கள், தற்போது ஏழு சதவீதமாக குறைந்துள்ளனர். 

அன்று பாலஸ்தீனத்துக்காக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சியினர், இன்று வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து மக்களுக்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர், மௌனமாக இருக்கின்றனர்.

பழனியில் நடைபெற உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டால், அவர் முருகனை வழிபட்டு நெற்றியில் திருநீர் இட வேண்டும். 

தமிழ் திரை உலகை முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, இந்து மத கோவில்களையும் திமுக மயமாக மாற்ற அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்து வருவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

இந்து மக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகிறது. இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்தும் திமுகவின் ஜால்ராவாக ஆன்மீக சொற்பொழிவாளர்கள் சுகிசிவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்று எச். ராஜா தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja Say About DMK MK Stalin and Hindu people and Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->